கனடாவின் இந்தப் பகுதியில் உறைபனி குறித்து எச்சரிக்கை
கனடாவின் கிழக்கு பகுதியில் சில பகுதிகளில் உறைபனிப் பொழிவு குறித்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கனடாவின் மேற்கு மாகாணங்களில் தொடர்ச்சியான காட்டு தீ காரணமாக இன்று பல பகுதிகளில் காற்றுத் தரம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்டா, சஸ்கச்சுவான் மற்றும் வடமேற்கு டெரிட்டோரிஸ் உள்ளிட்ட மாகாணங்களின் பல பகுதிகள் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ளன.
எச்சரிக்கை அறிவிப்பு
குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் சென்ட்ரல் ஒகனாகன், கூட்டனே ஏரி, ஆல்பர்டாவில் லெத்ப்ரிட்ஜ், ஹை லெவல், சஸ்கச்சுவானில் பஃப்பலோ , பியூவல், நார்த்வெஸ்ட் டெரிட்டோரிஸில் ஃபோர்ட் சிம்ப்சன் ஆகிய இடங்களில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளில் தங்கியிருக்கவும், கதவுகள், ஜன்னல்கள் மூடியிருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
காட்டு தீ நேரத்தில் புகை நிலைமை திடீரென மாறக்கூடும். எனவே வெளிப்புற செயல்பாடுகளை தவிர்க்கவும் அல்லது ஒத்திவைக்கவும் என கனடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அதேபோல் நோவா ஸ்கோஷியாவின் அனப்போலிஸ் கவுண்டியிலும் காற்றுத் தர எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு தீ அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேவேளை, கிழக்கு கனடாவின் காரணமாக ஒன்டாரியோ, க்யூபெக் மற்றும் நியூப்ரன்சுவிக் மாகாணங்களின் பல பகுதிகளில் உறைபனி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
உறைபனியால் பாதிக்கக்கூடிய தாவரங்கள் மற்றும் பயிர்களைப் பாதுகாக்க, அவற்றை மூடி வைக்குமாறு விவசாயிகள், வீடுதோட்டக்காரர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.