கனடாவின் இரண்டு மாகாணங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் அட்லான்டிக் மாகாணங்கள் இரண்டில் கடுமையான குளிருடனான காலநிலை நிலவும்; என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் கடுமையான பனிப்புயல் வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு நோவா ஸ்கோட்டியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் எனவும் யார்மோத் மற்றம் ஸெல்போர்ன் பகுதிகளில் 20 சென்றிமீற்ர் வரையில் பனிப்பொழிவு நீடிக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கனேடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எதிர்வு கூறல்களை வெளியிட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் வேளைகளில் திடீரென பாதைகள் தெரியாது எனவும், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனம் செலுத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நியூபவுன்ட்லாண்ட் மற்றும் லொப்ராடர் ஆகிய பகுதிகளில் கடுமையான குளிர் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த வாரம் குறித்த பகுதிகளில் மறை 40 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.