ஆக்ரோஷத்துடன் வெடித்து சிதறிய எரிமலை: அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்
ஐஸ்லாந்து நாட்டின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளது.
கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை நேற்றிரவு ஆக்ரோஷத்துடன் வெடிக்க தொடங்கி தீப்பிழம்பை கக்கி வருகிறது.
கடந்த ஒரு வாரமாக குமுறிக் கொண்டிருந்த நிலையில் நேற்று வெடித்து சிதறியுள்ளது.
An eruption has begun near the evacuated town of Grindavík. Our priorities remain to protect lives and infrastructure. Civil Defence has closed off the affected area. We now wait to see what the forces of nature have in store. We are prepared and remain vigilant.
— President of Iceland (@PresidentISL) December 19, 2023
? @Vedurstofan pic.twitter.com/yKx4WKU61c
எரிமலை வெடிப்பு காரணமாக கிரின்டாவிக் பகுதியில் வசிக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், எரிமலை வெடிப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பகத்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.