அடி மேல் அடி வாங்கும் புடின் ; ரஷ்யா மீது கடுமையான தடை உத்தரவு பிறப்பித்த ஐரோப்பிய ஒன்றியம்
ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் ஆண்டுகள் கடந்தும் முடியாத நிலையில், ரஷ்யாவின் அஸ்திவாரத்தை தகர்க்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் ஐரோப்பிய ஒன்றியம் முக்கியமான அறிவிப்பை தடை உத்தரவுகளை வெளியிட்டு உள்ளது.
ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போரில் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் உக்ரைன் பக்கம் நிற்கும் காரணத்தால், ரஷ்யாவின் உலகளாவிய வர்த்தகம், நிதி பரிமாற்றம், கச்சா எண்ணெய், வைரம் என உலகளாவிய சப்ளை செயினில் இருந்து ரஷ்யாவை மொத்தமாக ஒதுக்கி வைத்துள்ளது.
வர்த்தக தடை உத்தரவு
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ரஷ்யா மீது 18வது முறையாக வர்த்தக தடை உத்தரவுகளை விடுத்துள்ளது.
இந்த வர்த்தக தடை உத்தரவுகளில் ரஷ்யா மற்றும் உலக நாடுகள் மத்தியிலான நிதி பரிமாற்றம் மற்ரும் கச்சா எண்ணெய் வர்த்தகம் குறிவைத்து தடை உத்தரவுகளை ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் மாபெரும் எண்ணெய் நிறுவனமான ரோஸ்னெஃப்ட்-ன் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் தடைகளை விதித்துள்ளது, இதேபோல் ரஷ்யா விற்பனை செய்யும் கச்சா எண்ணெய்-ன் அதிகப்படியான விலை அளவை (oil price cap) குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ரஷ்யாவின் நிதி நிலையை மோசமாக்கும்.
இதில் ரஷ்யா உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விற்க வேண்டும் என்றால் ஒரு பேரலுக்கு அதிகப்பட்சமாக 60 டாலர் அளவில் தான் விற்க வேண்டும் என்ற கட்டுப்பட்டை விதித்திருந்தது. இன்றைய அறிவிப்பில் ரஷ்யா ஒரு பேரலை 47.60 டாலருக்கு மட்டுமே விற்க வேண்டும் என அறிவித்துள்ளது.
இந்த விலையை சந்தை விலையை ஒப்பிட்டு 15 சதவீதம் குறைத்து அறிவித்துள்ளது ஐரோப்பிய யூனியன். இந்த விலையை தாண்டி விற்பனை செய்தால் ரஷ்யா மேற்கத்திய நாடுகளிடம் இருந்து எதிர்வினைகளை எதிர்கொள்ளும்.
இந்த நடவடிக்கைகள் ரஷ்யாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் அதே வேளையில், இந்தியாவுக்கு குறைவான விலையில் எண்ணெய் கிடைப்பதற்கு வழிவகுக்கும்.