ரஷ்ய விமான சேவைகள் ஸ்தம்பிதம்!
ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான் எல்லைக்குள் நுழையத் தடை விதித்துள்ளதனால் ரஷ்ய விமானங்களின் தங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளன.
அதன்படி, ரஷ்யாவில் பதிவுசெய்யப்பட்ட அல்லது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ரஷ்ய நாட்டுக்குச் சொந்தமான எந்த விமானமும் ஐரோப்பிய ஒன்றியப் பகுதியில் பறக்கவோ அல்லது தரையிறங்கவோ அனுமதிக்கப்படாது.
இதில் தனியார் ஜெட் விமானங்களும் அடங்கும். இதன் விளைவாக, பல ரஷ்ய விமான நிறுவனங்கள் ஐரோப்பிய இடங்களுக்கான விமானங்களை நிறுத்தியுள்ளன.
ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா ஃபோண்டர்லீன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்பாக சில அழுத்தங்களைக் கொடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.