போர் பதற்றம்; உக்ரைனிலுள்ள தனது தூதரகத்தை முடிய ஐரோப்பிய நாடொன்று!
ஐரோப்பிய நாடான டென்மார்க் உக்ரைனில் செயல்பட்டு வந்த தங்கள் நாட்டு தூதரகத்தை மூடிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் விவகாரம் கடந்த சில நாட்களாக உலக அரங்கில் பதற்றத்தை அதிகரித்திருந்த நிலையில், இன்று காலை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது போர் தொடுக்க ராணுவ படைகளுக்கு ஆணை பிறப்பித்து அதிர்ச்சியளித்துள்ளார்.
இதன்படி ரஷிய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து குண்டு மழை பொழிந்து வருகின்றன. உக்ரைன் மீது பல மணிநேரமாக வான்வெளி தாக்குதல் நடத்தும் ரஷியா தற்போது அந்நாட்டிற்குள் நுழைந்து தாக்கத்தொடங்கி உள்ளது.
இதனால் உக்ரைனில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள், சுரங்க்பாதைகளில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ஐரோப்பிய நாடான டென்மார்க் உக்ரைனில் செயல்பட்டு வந்த தங்கள் நாட்டு தூதரகத்தை மூடிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் செயல்பட்டு வரும் தூதரக அலுவலகம் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளதாக டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்போது உக்ரைனில் உள்ள தனது தூதரகம் மற்றும் துணை தூதரகங்களில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரையும் வெளியேற்றும் பணியை டென்மார்க் தொடங்கியது.
இதன் காரணமாக தலைநகர் கீவில் உள்ள டேனிஷ் தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு, “அடுத்த 24 மணிநேரத்தில் தொடர்ந்து நிகழும்” என, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் எச்சரித்திருந்தார்.
அதே போல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் “ரஷ்யா இப்போது மறுக்கமுடியாத வகையில் உக்ரைனுக்கு எதிராக நகர்ந்துள்ளது.
இந்த நிலையில், உலக தலைவர்கள் பலரும் எச்சரித்தபடி ரஷ்யா உக்ரைன் மீது தனது தாக்குதலை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.