வெளிநாடொன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
கிரீஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரீஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
மேலும், குறித்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. கிரீஸ் நாட்டில் உள்ள கிரீட் தீவிலும் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை உணர முடிந்ததாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த நிலநடுக்கம் கடல் பகுதியில் ஏற்பட்டதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறியதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளீயிட்டுள்ளன.