உறுப்பு நாடாகும் விண்ணப்பத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர்!
ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகும் விண்ணப்பத்தில் உக்ரைனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கையெழுத்திட்டுள்ளார்.
"வரலாற்றுபூர்வ ஆவணம் இது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் ஆவதற்கான விண்ணப்பத்தில், நேற்றைய தினம் திங்கட்கிழமை (28.02-2022) கியவில் உக்ரைனிய அதிபர் கையெழுத்திட்டுள்ளார்" என்று அவரது செய்தித்தொடர்பாளர் நிகிஃபோரோவ் தனது முகநூலில் பக்கத்தில் கூறியுள்ளார்.
இந்த ஆவணத்தில் உக்ரைனிய நாடாளுமன்ற சபாநாயகர் ருஸ்லான் ஸ்டீபன்சுக் மற்றும் பிரதமர் டெனிஸ் ஷ்மிகல் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.
"ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் ஆகும் தேர்வு மற்றும் பாதுகாப்புக்காக மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளது உக்ரைன்," என்று நிகிஃபோரோவ் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் ஒருங்கிணைவது அதன் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருக்கும் என்று அதிபர் அலுவலகம் நம்புகிறது.
உக்ரைனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் (Volodymyr Zelenskyy) கையெழுத்து நடைமுறையைத் தொடர்ந்து இனி அதை ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை செய்வதற்கான சிறப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.