வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த ஐரோப்பிய யூனியன்
பரஸ்பர வரி விதிப்பை நிறுத்திய அமெரிக்காவின் செயலை வரவேற்கும் விதமாக தாங்களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்கையை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக 27 உறுப்பு நாடுகளுக்கான வர்த்தகத்தை கையாளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறியதாவது,
அமெரிக்க ஜனாதிபதி பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்ததற்கு இணையாக நாங்களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்கைகள் எடுப்பதை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.
அதன்படி, 20.9 பில்லியன் யூரோக்கள் (23 பில்லியன் டாலர்) அமெரிக்கப் பொருட்களின் மீதான புதிய வரிகள் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.
ஏனெனில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு வாய்ப்பை வழங்க விரும்புகிறோம். இந்த பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இல்லை என்றார், எங்கள் எதிர் நடவடிக்கைகள் தொடங்கும்.
பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைக்கும் அதிபர் ட்ரம்பின் முடிவு வரவேற்புக்குரியது. இது உலகப் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இவ்வாறு உர்சுலா தெரிவித்துள்ளார்.