சூயஸ் கால்வாயில் சிக்கிய ‘எவா் கிரீன்' கப்பல் முடக்கம்!

Shankar
Report this article
சூயஸ்' கால்வாயில் சிக்கி வர்த்தக பாதிப்பை ஏற்படுத்திய ‘எவா் கிரீன்' சரக்கு கப்பலை எகிப்து அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான, உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எவா் கிரீன்' என்ற சரக்கு கப்பல், மார்ச் மாதம் 23-ம் தேதி உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றபோது கால்வாயின் குறுக்கே திரும்பி பக்கவாட்டில் தரை தட்டி நின்றது.
கடும் போராட்டத்திற்கு பின் மார்ச் 29ம் தேதி அந்த கப்பல் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. உலக சரக்கு கப்பல் போக்குவரத்தில் 15 சதவீதம் இந்த கால்வாய் வழியாக தான் நடக்கிறது. இந்த கப்பல் சிக்கிக் கொண்டதால் உலக வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சூயஸ் கால்வாயில் சிக்கி வர்த்தக பிரச்சினை ஏற்படுத்திய அந்த ‘எவா் கிரீன்' கப்பலை எகிப்து அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
கப்பலின் உரிமையாளரிடம் இருந்து இழப்பீடு பெறும் வரை ‘எவா் கிரீன்' கப்பல் நாட்டில் இருந்து புறப்படக்கூடாது' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் உரிமையாளரான ஷோய் கிசென் கைஷா லிமிடெட் நிறுவனத்திடம் 6600 கோடி ரூபாய் இழப்பீடாக கோரப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே பேச்சு நடந்து வருவதாகவும் தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.