கொலம்பியாவில் காதலை முறித்த காதலியை பழிதீர்த்த காதலன் ; நீதிமன்ற தீர்ப்பால் பெண் அதிர்ச்சி
கனடா பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில், அவருடைய ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை அவருடைய முதலாளிக்கு, முன்னாள் காதலர் அனுப்பியுள்ளார் என்றும் அதற்கு நஷ்டஈடு கேட்டும் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
பணிநேரத்தின்போது ஆபாச படங்கள்
பெண் பணிநேரத்தின்போது, அவர் பணிபுரிந்த இடத்தில் இருந்தபடி, புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்களை படம் பிடித்து அ முன்னாள் காதலருக்கு அனுப்பியுள்ளார்.
காதலர்களாக இருவரும் இருந்தபோது, இந்த ஆபாச படங்கள் பகிரப்பட்டு உள்ளன. அவற்றில் சில பொதுமக்கள் கூட கூடிய, நிறுவனத்தின் முகப்பு பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளிலும் படம் பிடிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், இவர்களுக்குள் காதல் கசந்தது. இருவரும் பிரிவது என முடிவு செய்து தனித்தனியாக சென்று விட்டனர். இப்போது அந்த காதலர், முன்னாள் காதலியின் ஆபாச படம் மற்றும் வீடியோக்களை அவர் வேலை செய்து வரும் நிறுவனத்தின் முதலாளிக்கு என்ன காரணத்தினாலோ அனுப்பி வைத்து உள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, பணியிடத்தில் இதுபோன்ற தவறாக நடந்து கொண்டிருக்கிறார் என முதலாளிக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே அப்படி செய்தேன் என கோர்ட்டில் கூறியிருக்கிறார்.
பெண்ணின் மனு தள்ளுபடி
எனினும், காதல் முறிவு ஏற்பட்ட ஆத்திரத்திலேயே, தன்னுடைய மதிப்பை கெடுக்கும் உள்நோக்கத்துடன் முன்னாள் காதலர் இதனை செய்துள்ளார் என அந்த பெண் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த பொதுமக்கள் தீர்வுக்கான தீர்ப்பாயம்,
ஆபாச புகைப்படம் பாதுகாப்பு சட்டத்தின்படி, நிர்வாணம் அல்லது பாலியல் செயல் ஆகியவை வெளிப்படும் வகையில் அந்த புகைப்படங்கள் இருக்க வேண்டும். அதனுடன் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டபோது, தனியுரிமை என்பதற்கான உரிய ஒரு காரணம் இருக்க வேண்டும்.
இந்த வழக்கில், முதல் நிபந்தனை (நிர்வாணம்) பூர்த்தியாகிறது என தீர்ப்பாயத்தின் உறுப்பினர் மேகன் ஸ்டூவர்ட் கூறினார். இதனால், அந்த முன்னாள் காதலிக்கு இழப்பீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தொடர்ந்து ஸ்டூவர்ட் கூறும்போது, இரண்டாவது விசயம் அப்படியில்லை. அந்த பெண் பணியிடங்களில், பொதுமக்கள் அதிகம் வந்து போக கூடிய இடங்களில் புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் அந்தரங்கம் சார்ந்தவை என கொள்ளப்பட்டாலும், அவற்றை முதலாளியிடம் பகிர்ந்தது என்பது நியாயத்திற்குரியது. ஏனெனில் அது பொதுநலன் சார்ந்தது என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
அந்த புகைப்படங்கள் முதலாளியின் உரிமைக்குரிய இடத்தில் எடுக்கப்பட்டவை மற்றும் பணிநேரத்தின்போது எடுக்கப்பட்டு உள்ளன. அதனால், அதுபற்றி முதலாளியிடம் தெரியப்படுத்துவதில் ஏற்கத்தக்க ஒரு காரணம் உள்ளது என கூறி, அந்த பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.