மெட்டா நிறுவனம் மீது முன்னாள் பணியாளர் வழக்கு
வாட்ஸ்அப்பின் முன்னாள் பாதுகாப்புத் தலைவர் அத்தாஉல்லா பைக், மெட்டா நிறுவனம் (ஃபேஸ்புக் உரிமையாளர்) மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்க நீதிமன்றில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 1,500 பொறியாளர்கள், பயனாளர் தரவுகளை தடையற்ற அணுகல் பெற்றிருந்தனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
2021 முதல் 2025 வரை வாட்ஸ்அப்பின் பாதுகாப்புத் தலைவராக பணியாற்றிய பைக் கடமையாற்றியுள்ளார்.
இது 2020-ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா விவகாரத்துக்குப் பின் அமெரிக்க அரசு விதித்த 5 பில்லியன் டொலர் அபராத உத்தரவை மீறுவதாக இருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
பைக் தனது புகாரில், வாட்ஸ்அப் பொறியாளர்கள் பயனாளர் தொடர்பு எண்கள், IP முகவரி, ப்ரொஃபைல் புகைப்படங்கள் உள்ளிட்ட தரவுகளை “தடயமின்றி எடுத்துச் செல்லலாம்” என கண்டறிந்ததாக தெரிவித்துள்ளார்.
பைக் பலமுறை தனது கண்டறிதல்களை, வாட்ஸ்அப் தலைவர் வில் கத்த்கார்ட் மற்றும் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் ஆகியோரிடம் தெரிவித்ததாகக் கூறுகிறார்.
எனினும், அதற்கு பதிலாக, அவர் எதிர்மறையான மதிப்பீடுகள், வாய்வழி எச்சரிக்கைகள் பெற்றதாகவும், இறுதியில் 2025 பிப்ரவரியில் “மோசமான செயல்திறன்” என்ற காரணத்தால் நீக்கப்பட்டதாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.