ரொறன்ரோவில் ஏ.ரீ.எம். இயந்திரம் கொள்ளை
ரொறன்ரோவில் ஏ.ரீ.எம் இயந்திரம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
ரொறன்ரோவின் நோர்த் யோர்க் பிராந்தியத்தில் வங்கியொன்றின் ஏ.ரீ.எம். இயந்திரம் தகர்க்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.
பெக்கோ இயந்திரம் ஒன்றின் மூலம் கட்டடத்திற்கு பலத்த சேதம் ஏற்படுத்தப்பட்டு இந்த கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அதிகாலை வேளையில் கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நோர்த் யோர்க்கின் லோரன்ஸ் மற்றும் பதுரஸ்ட் வீதிகளில் அமைந்துள்ள TD வங்கியில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எவ்வளவு தொகை பணம் களவாடப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
எவ்வாறெனினும் வங்கிக் கட்டடத்திற்கு பெரும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.