Omicron தொடர்பில் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
எதிர்வரும் வாரங்களில் Omicron பரவல் அதி தீவிரமடையும் எனவும் மக்கள் எதிர்கொள்ள தயாராக வேண்டும் எனவும் அமெரிக்க சுகாதாரத்துறை நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Omicron மாறுபாடு தற்போது அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனைகள், பள்ளிகள், தொறிற்கூடங்கள் உட்பட இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளும் உச்சத்தை எட்டிவருவதை அடுத்தே நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெடரல் நிர்வாகம் கடுமையான பயணத்தடைகளை விதித்துவரும் நிலையில், 12 முதல் 15 வயதுடையோர்களுக்கு அடுத்த வாரம் பூஸ்டர் தடுப்பூசிக்கான ஆயத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக, அமெரிக்காவில் 290,000 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தது 18 மாகாணங்களில் கொரோனா பாதிப்பின் புதிய உச்சம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டுமின்றி ஒட்டுமொத்த அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கையும் 27% அதிகரித்துள்ளது.
ஜனவரி மாதம் கண்டிப்பாக அமெரிக்க மக்களுக்கு கடுமையானதாக இருக்கும் எனவும், தொற்றுநோய் புயல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மொத்த சமூகவும் இந்த அழுத்தத்தை எதிர்கொள்ள இருக்கிறது எனவும் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.