உலகின் மிகவும் ஆழமான நன்னீர் குகை ஆராய்வு... அதிர்ச்சியடைந்த ஆய்வாளர்கள்!
உலகின் மிகவும் ஆழமான நன்னீர் குகையை ஆராயும் ஆய்வாளர்கள் இன்னும் கீழே இறங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், செச்சியாவின் மொராவியாவில் உள்ள ஹிரானிஸ் அபிஸ் குகை ஆய்வாளர்கள் நினைத்ததை விட ஆழமானதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, டெத் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஒரு ட்ரோனை குறித்த குகைக்குள் அனுப்பி ஆய்வாளர்கள் தனது பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ட்ரோனானது அதிகபட்ச ஆழமான 1,476 அடியை எட்டியபோது வேலை செய்வதை நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து ட்ரோன் அடிமட்டத்தை அடைவதற்கு பல மைல்கள் இருக்கலாம் என்று புவியியலாளர்கள் நம்புகின்றனர்.
இந்த நன்னீர் குகையில் தண்ணீரில் இருந்து வெளியேறும் வாயுக்கள் முக்கியமாக கார்பன் டை ஆக்சைடைக் கொண்டிருக்கின்றன, ஆனால் ஒரு சிறிய அளவு ஹீலியம் உள்ளது.
இது பூமியின் மேலோட்டத்தின் மேல் பகுதியில் இருந்து வருகிறது, இது 40 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளது என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த பகுதியில் இனி ஆய்வுகளை மேற்கொள்ள ரோபோவையே செலுத்த வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வரைபடம் கூட தங்களிடம் இல்லை எனக் கூறும் அவர்கள், ஒரு வருடத்திற்குள் ஒரு புதிய சோனார் உபகரணத்தை வாங்குவோம், அது குறைந்தது 1,500 மீட்டரை எட்டும் திறன் கொண்டது, எனவே நாங்கள் எவ்வளவு ஆழமாக செல்ல முடியும் என்பதை பார்க்கலாம் எனவும் கூறியுள்ளனர்