கனடாவின் இந்தப் பகுதிகளில் கடுங் குளிர் குறித்து எச்சரிக்கை
கனடாவின் சில பகுதிகளில் கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் அநேக பகுதிகளுக்கு சுற்றாடல் திணைக்களம் இவ்வாறு காலநிலை மாற்றம் தொடர்பிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு, பனிப்புயல் மற்றும் கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அல்பர்ட்டா, கியூபெக், ஒன்றாரியோ, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அட்லான்டிக் மாகாணங்களில் இவ்வாறு காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான எதிர்வுகூறல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சில பகுதிகளில் மறை 65 பாகை செல்சியஸ் அளவில் குளிர் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் பனிமழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினம் இவ்வாறு பனிப்பொழிவு, பனிப்புயல் மற்றும் கடுமையான குளிரூடனான காலநிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.