கனடாவில் அதிக எண்ணிக்கையில் வீடுகள் நிர்மானிக்கப்படும் - கார்னி
கனடாவில் அதிக எண்ணிக்கையில் வீடுகள் நிர்மானிக்கப்படும் என லிபரல் கட்சி தலைவர் மார்க் கார்னி உறுதி அளித்துள்ளார்.
வீடுகளின் கட்டுமானத்தை இரண்டு மடங்கு வேகத்தில், ஆண்டுக்கு சுமார் 500,000 புதிய வீடுகள் கட்டத் திட்டமிடுவதாக முன்மொழிந்துள்ளார்.
இது இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் வேகாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லிபரல் அரசாங்கம் "பில்ட் கனடா ஹோம்ஸ்" என்பதை உருவாக்கி, புதிய வீட்டு திட்டங்களில் உருவாக்குனராக செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஹன், ஒன்டேரியோவில் நடைபெற்ற பிரசாரத்தில் பிரதமர் கார்னி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
புதிய அணுகுமுறை மூலம் கூடுதல் எண்ணிக்கையிலான வீடுகளை நிர்மானிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.