நள்ளிரவுக்குள் கலைந்து செல்லாவிட்டால் கடும் அபராதம்... கனேடிய பொலிசார் எச்சரிக்கை
கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக, அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கும் பாலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கனேடிய ட்ரக் சாரதிகள் போராட்டம் நடத்திவருவதால், இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து, குறிப்பாக சரக்குப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இன்னும் சற்று நேரத்திற்குள், அதாவது கனேடிய நேரப்படி, நள்ளிரவுக்குள் பாலத்திலிருந்து கலைந்து செல்லாவிட்டால், 100,000 கனேடிய டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும், சாரதிகளின் ஓட்டுநர் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் கனேடிய பொலிசார் எச்சரித்துள்ளார்கள்.
உண்மையில், இரவு 7.00 மணிக்குள் பாலத்தை விட்டு கலைந்து செல்லவேண்டும் என ஏற்கனவே பொலிசார் சாரதிகளுக்கு கெடு விதித்திருந்தார்கள். ஆனால், அதையும் மீறி போராட்டம் தொடர்வதையடுத்து, தற்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடைசி நடவடிக்கையாக இராணுவத்தை களமிறக்கும் திட்டமும் கையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Police are distributing these flyers about the province’s State of Emergency. pic.twitter.com/D6rYC2a6zE
— Katerina Georgieva (@KatGeorgieva) February 12, 2022