கனடாவிலிருந்து இந்தியா திரும்பிய நபர்: குடும்பம் கொடுத்த அதிர்ச்சி

Canada Indian Origin
By Balamanuvelan Jul 04, 2026 06:36 AM GMT
Report

பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி நடித்த திரைப்படம் ஒன்றில், குடும்பத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவதற்காக அரபு நாடொன்றிற்குச் செல்வார் கதாநாயகன்.

இள வயது மனைவியையும் குடும்பத்தையும் பிரிந்து வாழும் கதாநாயகன், எப்போதும் தன் நாட்டிலிருக்கும் குடும்பத்தைக் குறித்தே எண்ணிக்கொண்டிருப்பார். 

கனடாவிலிருந்து இந்தியா திரும்பிய நபர்: குடும்பம் கொடுத்த அதிர்ச்சி | Family Shocks Canada Return Indian

இளைமையை தொலைத்து, கஷ்டப்பட்டு உழைத்து குடும்பத்தை ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டு, கடைசியாக 50 வயதில் நாடு திரும்புவார் அவர்.

ஆனால், விடுமுறைக்கு வரும்போதெல்லாம் அவருக்கு கிடைக்கும் வரவேற்பு இனி இருக்காது என்பதும், தன் குடும்பத்துக்கு, தன் பணம்தான் முக்கியம், தான் அல்ல என்பதை புரிந்துகொண்ட அவர், மன வேதனையுடனும், ஏமாற்றத்துடனும் மீண்டும் தான் வேலை செய்துவந்த அரபு நாட்டுக்கே திரும்பிவிடுவார்.

அதேபோன்றதொரு விடயம் இந்தியர் ஒருவருக்கு உண்மையாகவே நிகழ்ந்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், கனடாவுக்கு கல்வி கற்பதற்காக சென்றுள்ளார் இந்திய இளைஞர் ஒருவர்.

படித்து முடித்தபின், துரதிர்ஷ்டவசமாக அவருக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்கவில்லை.

ஏற்கனவே சொந்த நாட்டையும் குடும்பத்தையும் மிஸ் பண்ணிய அவர், இந்தியாவுக்கே திரும்பிவிடலாம் என முடிவு செய்துள்ளார்.

ஆனால், தான் கனடாவிலிருக்கும் வரை தான் தன் குடும்பத்தால் நடத்தப்பட்ட விதத்துக்கும், இப்போது இந்தியா வந்தபின் தான் நடத்தப்படும் விதத்துக்கும் பயங்கர வித்தியாசம் இருப்பதாகக் கூறுகிறார் அவர்.

நான் கனடாவில் படிக்கும்போது கல்விக்கடன் வாங்கித்தான் படித்தேன். என் கடனையும் நானே அடைத்துக்கொண்டு, வீட்டுக்கும் பணம் அனுப்பினேன்.

இப்போதும் என் செலவுகளை நான்தான் கவனித்துக்கொள்கிறேன் என்று கூறும் அவர், ஆனால், என் தாய் என்னை நடத்தும் விதம் கூட மாறிவிட்டது என்கிறார்.

நீ போதுமான அளவில் முயற்சி செய்யவில்லை, அதனால்தான் உனக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்கவில்லை, நீ கனடா சென்றதே வீண், நீ கனடாவுக்குப் போயிருக்கவே கூடாது, தண்ட செலவு என்றெல்லாம் என் தாயே திட்டுகிறார்.

கடந்த ஒரு மாதமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன், என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கூறி, சமூக ஊடகம் ஒன்றில் தன் அனுபவத்தைப் பகிர்ந்து ஆலோசனை கோரியுள்ளார் அந்த இளைஞர்.

அவரது இடுகையைப் படித்த பலரும், அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US