பஞ்சத்தில் வாடும் வடகொரிய மக்கள்...கைத்தட்டி ரசித்த கிம்
வடகொரியா மக்களின் தற்போதைய நிலைக்க குறித்து எடுக்கப்பட்ட ஆவணப்படத்தை ரசித்த அந்நாட்டு அதிபரின் செயலானது தற்போது விவாதத்துக்கு ஆளாகியுள்ளது.
உலகம் எங்கும் தற்போது கொரோனா பரவளின் தாக்க அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இந்த நிலையில் உலகின் இருண்ட நாடான வடகொரியாவில் தற்போது கிம் ஜோங் உன் அவர்களின் சர்வாதிகார ஆட்சி இடம்பெற்று வருகிறது. இங்கு ஏற்படும் பஞ்சம் குறித்து சொல்ல வேண்டிய அவசியமில்லை.
அண்டை நாடான தென் கொரியாவை ஒப்பிடும்போது வடகொரியா கடும் உணவுப் பஞ்சம் மற்றும் பொருளாதார நெருக்கடியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிக்கித் தவித்து வருகிறது.
தற்போது வேடிக்கை சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆட்சி குறித்த 110 நிமிடங்கள் ஓடும் ஆவணப்படம் ஒன்று அந்நாட்டில் திரையிடப்பட்டது.
இந்த ஆவணப்படத்திற்கு 'சாதனை ஆண்டு 2021' என தலைப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஆவணப்படத்தை அந்நாட்டு அதிபர் கிம் கைதட்டி ரசித்துள்ளார். இதன் காரணமாக தங்களது அவல நிலையை அந்நாட்டு மக்களும் ரசித்துள்ளனர்.