பிரித்தானியாவை எச்சரிக்கும் பிரபல நிபுணர்!
பிரித்தானியாவில் கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது என பிரபல நிபுணர் பேராசிரியர் Graham Medley எச்சரிக்கை விடுத்துள்ளார். லண்டன் School of Hygiene & Tropical Medicine மற்றும் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் Modelling (Spi-M) குழுவின் Scientific Pandemic Influenza Group தலைவர் பேராசிரியர் Graham Medley இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் கொரோனா தொற்றால் சிறிய அளவிலான அச்சுறுத்தல்கள் இருந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு இயல்பு நிலைக்கு திரும்பக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதேசமயம் கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாததாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை ஆனால் 3வது அலையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா என்பது பெரிய கேள்வி என்று நான் நினைக்கிறேன் என குறிப்பிட்ட அவர், கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்தும் என பிப்ரவரியில் நாங்கள் கணித்திருந்தோம். ஆனால், தற்போது அது பொய்யாகிவிட்டது எனவும் குறிப்பிட்டார்.
தடுப்பூசிகள் வேலை செய்யாது என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டு பிப்ரவரி மாதத்தில் அவ்வாறு கணித்தோம், ஆனால் இப்போது தடுப்பூசிகள் வேலை செய்வதை நாங்கள் அறிவோம் எனவும் பேராசிரியர் Graham Medley மேலும் கூறினார்.