கனடாவில் மூடப்பட்ட தொழிற்சாலையில் விழுந்த சிறுமி உயிரிழப்பு
கனடாவின் மாண்ட்ரியாலுக்கு வடகிழக்கே உள்ள ஷவாவின்கான் Shawinigan நகரில் மூடப்பட்ட தொழிற்சாலையில் விழுந்த 15 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
மூடப்பட்டிருந்த Belgo காகித ஆலை வளாகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு மூடப்பட்ட Belgo தொழிற்சாலையின் சிலோவுக்குள் குறித்த சிறுமி விழுந்து சிக்கிக்கொண்டதாக தகவல் வழங்கப்பட்டது.
பணியகத்திற்குள் சென்ற இரண்டு இளைஞர்கள் சிலோவின் மேல் பகுதியில் ஏறி சென்றுள்ளனர்.
அந்தச் சிறுமி கீழே விழுந்து கான்கிரீட் மற்றும் உலோக அமைப்பில் சிக்கி விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்புக்குழுவினரின் பெரும் முயற்சிக்குப் பிறகு, சனிக்கிழமை காலை 4:40 மணியளவில் அந்தச் சிறுமி சிக்கிய இடத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், குறித்த சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துமனை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சம்பவத்துக்கான முழுமையான காரணம் மற்றும் மரணத்திற்கான சூழ்நிலை குறித்து வட்டார நீதிமன்ற மரண விசாரணை நடக்கவுள்ளது.
2008ஆம் ஆண்டு மூடப்பட்ட இந்த பழைய தொழிற்சாலை, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது என்பதையும், இளையவர்கள் அங்கு செல்லுவதை தவிர்க்கும்படி பொது மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.