சூடானில் படகு மூழ்கியதில் 13 பெண்களுக்கு நேர்ந்த கதி!
சூடான் நாட்டில் ஆற்றில் படகு மூழ்கியதில் 13 பெண்கள் உயிரிழந்தனா்.
மாயமான 10 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. சூடானின் தென்கிழக்கு மாகாணமான சென்னாா் பகுதியில் ‘ப்ளூ நைல்’ நதியில் 29 போ் பயணம் செய்த ஒரு படகு மூழ்கியது. படகை ஓட்டியவா் தவிர மற்ற அனைவரும் பெண்கள்.
தோட்டத் தொழிலாளா்களான இந்தப் பெண்கள் வேலைக்குச் சென்றுவிட்டு படகில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது படகு ஆற்றில் மூழ்கியதில் படகை ஓட்டியவரும், 5 பெண்களும் மட்டும் தப்பினா். மற்ற அனைவரும் ஆற்றில் மூழ்கினா்.
இவா்களில் 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்ற 10 பேரை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேப்போல் அளவுக்கு அதிகமான சுமை காரணமாக படகு மூழ்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 2018-ஆம் ஆண்டு சூடானில் நைல் நதியில் ஒரு படகு மூழ்கியதில் 21 மாணவா்களும், ஒரு பெண்ணும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.