டொரொண்டோவில் பரிதாபம்: தந்தையும் 11 வயது மகனும் பரிதாப மரணம்
கனடாவின் டொரொண்டோ நகரின் ஸ்கார்பரோ பகுதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் 11 வயது மகன் ஆகியோர் கார் மோதி உயிரிழந்த சோக சம்பவம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
மோனிங்சைட் அவென்யூக்கு கிழக்கே உள்ள கிங்ஸ்டன் மற்றும் மான்ஸ் சாலைகள் சந்திக்கும் இடத்தில் மாலை 6.20 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக டொரொண்டோ பொலிஸாரும் உயிர்ப்பு படையினரும் தெரிவித்துள்ளனர்.
வெண்கல நிற கார் ஒன்றும் மோட்டர் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த 47 வயதுடைய தந்தையும், அவரது 11 வயது மகனும் இந்த விபத்தில் கடுமையான காயங்களை அடைந்தனர்.
தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், பின்னர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் ஈடுபட்ட 68 வயதுடைய Nissan வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தங்கி இருந்து பொலிஸ் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.