8 மாதக் குழந்தையைக் கொன்ற தந்தை...ஆபத்தான நிலையில் மனைவி: நடந்தது என்ன?
இந்திய மாநிலம் கேரளாவில், பிறந்து 8 மாதமேயான மகனை வெட்டிக் கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் ஏருவேஷி பகுதியில் குடியிருந்து வந்த 39 வயதான சதீஷன் என்பவரே தமது 8 மாத குழந்தையை கொன்றதுடன், மனைவி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அஞ்சு ஆ.பத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். உடல் முழுவதும் காயங்களுடன் தாயாரையும் கு.ழந்தையையும் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டதில், சிகிச்சை பலனின்றி குழந்தை மரணமடைந்துள்ளது. ஐக்கிய அமீரகத்தில் பணியாற்றி வந்துள்ள சதீஷன் கடந்த நான்கு ஆண்டுகள் முன்பு நாட்டுக்கு திரும்பியதுடன், திருமணமும் செய்து கொண்டுள்ளார்.
மட்டுமின்றி உளவியல் பா.திப்பு கொண்டவர் அவர் என்பதும் முதற்கட்ட வி.சாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த சில நாட்களாக மருத்து எடுத்துக்கொள்ளாமல் இருந்து வந்ததாகவும், சம்பவத்தன்று மனைவியையும் மகனையும் வாளால் வெட்டிய பின்னர் சதீஷன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றே பொலிசார் தெரிவிக்கின்றனர்.