கனடாவில் சில கியா ரக வாகனங்களில் நிலவும் குறைபாடு
கனடாவில் கியா ரக வாகனம் பயனர்களுக்கு விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கியாவின் Kia Fortes, Optimas, Souls, Sportages ரக வாகனங்கள் உள்ளிட்ட சுமார் 7 மாடல்கள் தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களில் கோளாறு காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக கியா நிறுவனம் அறிவித்துள்ளது.
சுமார் 280000 கியா வாகனங்களில் பிரேக் கட்டமைப்பில் கோளாறு காணபபடுவதாக அறவிக்கப்பட்டுள்ளது.
பிரேக் ஹைட்ரோலிக் இலத்திரனியல் கட்டுப்பாட்டு தொகுதியில் காணப்படும் கோளாறு வாகனத்தில் தீ பற்றிக்கொள்ளக்கூடிய ஆபத்தினை உருவாக்கியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கியா வாகனங்களை பயன்படுத்துவோர் தங்களது வாகனங்களை திறந்த வெளியில் நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.