டிரம்ப் உடனான விவாத நிகழ்ச்சியின்போது நான் தூங்கிவிட்டேன்... அதிபர் ஜோ பைடன்!
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன.
ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் களமிறங்கியுள்ளார். அதேபோல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் சிஎன்என் செய்தி நிறுவனம் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் இடையேயான நேருக்கு நேர் விவாதம் கடந்த 28ம் திகதி இடம்பெற்றது.
டிரம்ப் உடனான விவாத நிகழ்ச்சியின்போது கிட்டத்தட்ட தூங்கிவிட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், விவாத நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பாக நான் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேன். அதில் மிகவும் சோர்வாக இருந்தேன்.
இந்த விவகாரத்தை நான் சரிவர கையாளவில்லை. எனது அதிகாரிகள் கூறியதையும் நான் கேட்கவில்லை. விவாத நிகழ்ச்சியின்போது மேடையிலேயே நான் கிட்டத்தட்ட தூங்கிவிட்டேன்.
நான் விவாத நிகழ்ச்சியில் சரிவர செயல்படவில்லை. அதற்கு நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.