4 வயது சிறுமி ரயிலில் மோதுண்டு உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலி
ஒன்றாரியோவின் மிஸ்ஸிசாகுவாவில் நான்கு வயது சிறுமியொருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவம் பிரதேச மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
கோ ட்ரைன் ரயிலில் மோதுண்டு குறித்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரயில் பாதைக்கு அருகாமையில் பாதுகாப்பு வேலி அமைக்காத காரணத்தினால் இந்த துரதிஸ்டவசமான சம்பவம் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உடன் விரைந்த அதிகாரிகள் விபத்து இடம்பெற்ற பாதையில் கம்பி வலையினாலான வேலி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
குறித்த சிறுமி ரயில் பாதைக்கு எவ்வாறு வந்தார் என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.
நேற்றைய தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் இன்றையே தினமே குறித்த பகுதியில் பாதுகாப்பு வேலி உருவாக்கப்பட்டுள்ளது.