இரத்தக்களரியான ஆல்பர்ட்டா மோட்டார் சைக்கிள் கும்பலின் வாக்குவாதம்
இருவேறு ஆல்பர்ட்டா மோட்டார் சைக்கிள் கும்பல் மோதலில் ஈடுபட்டதில் ஐவர் கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Cranbrook பகுதியிலேயே குறித்த இரு கும்பலும் மோதியுள்ளது. எரிபொருள் நிரப்பும் இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதமே மோதலில் முடிந்துள்ளது.
தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், இரு கும்பலையும் அமைதிப்படுத்தியுள்ளனர். ஆல்பர்ட்டாவை சேர்ந்த இந்த மோட்டார் சைக்கிள் கும்பல் சம்பவத்தின் போது Cranbrook பகுதி வழியாக கடந்து செல்ல நேர்ந்துள்ளது.
இந்த மோதலையடுத்து ஐவர் கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையை நாடியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஆழமான காயங்கள் இல்லை , என்பதால் ஐவரும் உடனையே விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த கும்பலில் ஒன்றுடன் பொலிசாரும் நகர எல்லை வரை துணைக்கு சென்றுள்ளனர்.
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பில் விசாரிக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.