டொரொண்டோவில் வீடு வாங்குவதைவிட வாடகைக்கு பெறுவது லாபகரமானது
டொரொண்டோ நகரத்தில் தற்போது வீடு வாங்குவதைவிட வாடகைக்கு வாழ்வது குறைந்த செலவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Urbanation என்ற அறிக்கை நிறுவனம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டு முதல் காலாண்டில் டொராண்டோ பெரும்பாக பகுதியில் ஒரு கான்டோ வீட்டு மாத வாடகை சராசரியாக 2,612 டொலர்களாக குறைந்துள்ளது.
இது கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்த 2,925 டொலர்கள்என்ற உச்சத்திலிருந்து 10 சதவீதம் குறைவடைந்துள்ளது.
இன்று டொரொண்டோவில் வாழ மிகச்சிறந்த செலவுசேமிப்பு வழி என்பது வாடகைதான்,” என Century 21 நிறுவன விற்பனை பிரதிநிதி ஜோஷ் லாய்ட் தெரிவித்துள்ளார்.
வீடு வாங்கும் செலவு வாடகையைவிட 20% அதிகமாக இருந்தால், வாடகைக்கு இருப்பது பொருளாதார ரீதியாக நன்மையுள்ளதாக மற்றொரு நிலம் முகவர் மைக்கேல் தேவநாதன் தெரிவித்தார்.
நகர மையப் பகுதிகளில் புதிய வீடுகள் அதிகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால், வாடகை வீதங்கள் குறைந்துள்ளன.
பல வாடகையாளர் உரிமையாளர்கள் 1 அல்லது 2 மாதங்கள் இலவச வாடகை போன்ற சலுகைகளை வழங்கி காலியாக உள்ள வீடுகளை நிரப்ப முயற்சித்து வருகின்றனர்.
மற்றொரு பக்கத்தில், வீட்டு விலைகள் பெரிய அளவில் குறையவில்லை. மார்ச் மாதம், டொராண்டோ பகுதியில் வீட்டு சராசரி விலை 1,093,254 டொலர்களாக இருந்தது – கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் போது இது வெறும் 2.5% மட்டுமே குறைந்தது.
பல வீட்டு உரிமையாளர்கள் இன்று வாடகை வருமானம் மூலம் மாதம் தோறும் இழப்புகளை சந்திக்கின்றனர் என லாய்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஒரு வருடமாக, உரிமையாளர்கள் 1-2 மாதங்கள் இலவச வாடகையை வழங்கி காலி இடங்களை நிரப்ப முயற்சிக்கிறார்கள் – இதுபோன்ற சலுகைகளை இதற்கு முன் பார்த்ததில்லை, என தேவநாதன் தெரிவித்துள்ளார்.