வங்கிகளில் நிதி மோசடி... 234 பேருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் பல கிராமப்புற வங்கிகளில் நிதி மோசடி இடம்பெறுவதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
சட்டவிரோதமாக பெறப்பட்ட நிதியின் ஒரு பகுதியை வங்கி அதிகாரிகள் பயன்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வங்கிகளின் வட்டி மானியம் தரகர்களால் சுரண்டப்பட்டதாகவும் பணக்கார வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அது வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் ஹெனான் மாகாணத்தில் இருக்கும் 4 கிராமப்புற வங்கிகள் தங்கள் ஆன்லைன் சேவைகளை நிறுத்திவிட்டன, இதனால் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்கள் முறைப்பாடு அளித்ததைத் தொடர்ந்து, வங்கிகள் நிதி முறைகேடு சீன மக்களிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீன மத்திய வங்கியின் கிளைக்கு வெளியே ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பொதுமக்கள் வைப்பு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக 234 அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.