மெட்ரோவில் தொலைக்காட்சி எடுத்து சென்றவருக்கு அபராதம்!
பிரான்ஸ் மெட்ரோவில் தொலைக்காட்சி பெட்டியை எடுத்துச் சென்ற 27 வயதுடைய இளைஞருக்கு 150 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
“சட்டத்தை யாரும் அறியாமலிருக்க முடியாது” என்ற காரணத்தைக் குறிப்பிட்டு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

150 யூரோக்கள் அபராதம்
பொதுப் போக்குவரத்தில் அதிக இடத்தைப் பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லும் விதிமுறைகள் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன.
குறித்த இளைஞர், ஒரு பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியை தனது வீட்டிற்கு கொண்டு சென்றபோது, பரிஸ் மெட்ரோ அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பின்னர், அது பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் எனக் கருதப்பட்டதால், அவருக்கு 150 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னர், 2025 மே மாதத்தில் ஒரு இளம் பெண் பெரிய செடியொன்றை மெட்ரோவில் எடுத்துச் சென்றதற்காக அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த அபராதத்தை RATP திரும்பப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.