புளோரிடா விமான நிலையத்தில் தீ விபத்து
அமெரிக்காவில் புளோரிடா விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க விமான நிலையங்களில் ஒன்றான புளோரிடா ஜாக்சன்வில்லா சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ அங்கிருந்த ஏனைய 50க்கும் மேற்பட்ட வாகனங்களிலும் பரவியத்துடன் முதல் தளத்தில் பற்றிய தீ, ஏனைய தளங்களிலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்தை அடுத்து உடனடியாக விமான நிலையம் மூடப்பட்டதுடான் தீ விபத்தின் எதிரொலியாக 30க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
இதேவேளை, பல விமானங்களின் புறப்படும் மற்றும் வருகை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.