விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 மாணவர்கள் உடல் கருகி பலி
கென்யா நெய்ரி நகரில் உள்ளபாடசாலை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளதனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா.
இந்நாட்டின் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளியில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி உயிரிழந்ததுடன் , 13 மாணவர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
 
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் பள்ளி விடுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்து காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        