பாகிஸ்தானில் 'சாங்' இசைக்கருவியை வாசிக்கும் முதல் பெண்!
பாகிஸ்தான் நாட்டின் பாடின் நகரைச் சேர்ந்த ஷாஹீன் குல் தான் சாங் chang என்ற இசைக்கருவியை வாசிக்கும் முதல் பெண்ணாகக் கருதப்படுகிறார்.
பலூச் என்ற பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த ஷாஹீன் குல் சாங் இசைக்கருவி, சிந்தி மற்றும் பலூச் பழங்குடியினரின் கலாசாரங்களுடன் தொடர்புடையது என தெரிவித்துள்ளார்.
சாங் என்ற இசைக்கருவி ஆடு மேய்ப்பர்களுக்கான ஒரு மெல்லிசையாக இருந்தது.
ஆடு மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை காட்டில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும்போது, மேய்ப்பவர்கள் உட்கார்ந்து சாங் வாசிப்பார்கள்.
"இப்போது மேய்ப்பவர்கள் இன்னும் உள்ளார்கள், இன்னும் ஆடுகளும் இருக்கின்றன, ஆனால் சாங் இசைக்கருவிதான் வழக்கொழிந்து விட்டது," என ஷாஹீன் குல் கூறியுள்ளார்.
தனது குழந்தைப் பருவத்தில், பாகிஸ்தான் ரேடியோவில் ஒலிபரப்பான இசையின் மூலம் தனக்கு அந்தக் கருவி மீது ஆர்வம் வந்ததாக் ஷாஹீன் குல் கூறுகிறார்.