பிரபல நாட்டில் ஒமிரோனால் முதலாது மரணம் பதிவு
அவுஸ்திரேலியாவில், ஓமைக்ரோன் தொற்றால் 80 வயதைக் கடந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அங்கு முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவருக்கு ஏற்கெனவே சில உடல்நலக் கோளாறுகள் இருந்ததாக கூறப்படுகிறது. முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த அவர், வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை அவுஸ்திரேலியாவில் வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்றபோதும் , அங்கு புதிய கட்டுப்பாடுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. எனினும் இரண்டு ஆண்டு கட்டுப்பாடுகளிற்கு பின் மீண்டும் அவுஸ்திரேலியா அதன் கடுமையான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகிறது.
இந்நிலையில் , கட்டுப்பாட்டு தளர்விற்கு ஒமைக்ரோன் பரவல் தடையாக இருந்து வருகின்றதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.