ரொறன்ரோவில் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம்
கனடாவின் ரொறன்ரோ பகுதியில் இன்றைய தினம் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று ரொறன்ரோ பகுதிக்கு அதிக அளவு மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
டெபி புயல் காற்று காரணமாக இவ்வாறு கூடுதல் மழை வீழ்ச்சியை பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
நூறு மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நகர பகுதிகளில் அதிக மழை வீழ்ச்சி காரணமாக வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முறையான வடிகாலமைப்பு வசதிகள் இல்லாத நகர பகுதிகளில் திடீர் வெள்ள நிலைமையை எதிர் நோக்க நேரிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரொறன்ரோவில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது