இத்தாலி விவசாயிகளின் புதிய முயற்சி ; கேபிள் கார்களில் பயணிக்கும் ஆப்பிள்கள்
இத்தாலி நாட்டின் வடக்கு பகுதிகளில் ஆப்பிள் விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிற நிலையில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த ஆப்பிள்களை மலைகளில் இருந்து கீழே இறக்குவதற்கு தற்போது கேபிள் கார்களை பயன்படுத்தி வருகின்றனர்.
மலைகளில் அறுவடை செய்யப்படும் ஆப்பிள்களை கீழே இறக்குவதற்கு லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கான செலவும் அதிகரித்து வருவதால், விவசாயிகள் மாற்றுத் திட்டங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், வடக்கு இத்தாலியில் உள்ள ஆப்பிள் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த ஆப்பிள்களை மலைகளில் இருந்து கீழே இறக்குவதற்கு தற்போது கேபிள் கார்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் ஆண்டுதோறும் மலைகளில் இருந்து ஆப்பிள்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டு வரும் 5 ஆயிரம் லாரிகளின் பயன்பாடு குறையும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு கண்டெய்னரும் சுமார் 300 கிலோ ஆப்பிள்களை தூக்கிச் செல்லும் திறன் கொண்டவையாக உள்ளன. கேபிள் கார்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் 460 கண்டெய்னர்கள் மலையிலிருந்து கீழே இறக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.