கிம்புலபிட்டியவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! 4 பேருக்கு நேர்ந்த விபரீதம்
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கிம்புலபிட்டியவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது ஏற்பட்ட விபத்த்தில் 4 பேர் காயமடைந்துள்ளார்.
தனியார் Sakurai aviation க்கு சொந்தமான Cessna 172 இலகுரக விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் இரு விமானிகள் உட்பட நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிரிய விமானப் படைத் தளத்திலிருந்து கொக்கலை நோக்கிப் பயணித்த போது விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டான கிம்புலாபிட்டிய பகுதியில் விமானத்தை தரையிறக்க விமானி முயற்சித்தபோதே விபத்து ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 22 ஆம் திகதியும் இதே விமான நிறுவனத்தின் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயாகல கடற்கரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.