ரியாத் மற்றும் தம்மாமுக்கான விமான சேவை தொடர்ந்தும் இடைநிறுத்தம்
சவூதி அரேபியாவின் தம்மாம் மற்றும் ரியாத் ஆகிய நகரங்களுக்கான அனைத்து விமானச் சேவைகளையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வணிக ரீதியிலான விமானச் சேவை
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பே தமது முதன்மையான முன்னுரிமை எனக் குறிப்பிட்டுள்ளது.
வணிக ரீதியிலான விமானச் சேவைகளை முன்னெடுப்பதற்குச் சாதகமான சூழல் நிலவுவது உறுதி செய்யப்பட்ட பின்னரே, மீண்டும் விமானச் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, இலங்கையிலுள்ள பயணிகள் 1979 என்ற தொலைபேசி இலக்கத்துடனும், வெளிநாட்டிலுள்ள பயணிகள் +94 11 777 1979 என்ற இலக்கத்துடனும் அல்லது வட்ஸ்அப் (WhatsApp) ஊடாக +94 74 444 1979 என்ற இலக்கத்துடனும் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.