கல்கரியில் அடர்ந்த பனிமூட்டம்: சாரதிகளுக்குக் கனடா காலநிலை மையம் எச்சரிக்கை!
கனடாவின் கல்கரி நகரில் அடர்ந்த பனிமூட்டம் நிலவியதை அடுத்து, கனடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கனடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பு தனது இணையதளத்தில் மஞ்சள் நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சில பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாகப் பார்வைத் திறன் கிட்டத்தட்ட பூஜ்ஜிய நிலைக்குக் குறைந்துள்ளது. காலையின் பிற்பகுதியில் இந்த பனிமூட்டம் மெல்ல மெல்ல விலகக்கூடும்.

சில பகுதிகளில் பயணம் செய்வது ஆபத்தானதாக இருக்க வாய்ப்புள்ளது. சாரதிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகத்தைக் குறைத்தும், முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதுமான பாதுகாப்பான இடைவெளியைப் பராமரித்தும் கவனமாக வாகனத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.