பார்த்தாலே சாப்பிடத் தூண்டும் சுவைமிகு அப்பம்- செய்வது எப்படி?
இலங்கையர்களின் மிகவும் பிரசித்த பெற்ற உணவு அப்பம், இதனை விரும்பாதவர்களே இல்லை என்று கூறலாம்.
மிகவும் ருசியாக முருகலாக இதன் சுவையே அலாதியாக இருக்கும்.
இதனை செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சை அரிசி – 1 கிண்ணம்
இட்லி அரிசி – 1 கிண்ணம்
வெள்ளை அவல் – 1/2 கிண்ணம்
உளுந்து – 1/4 கிண்ணம்
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
சீனி – 1 தேக்கரண்டி
தேங்காய் – 1/2 கிண்ணம்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
அரிசி, உளுந்து, அவல், வெந்தயம் கலந்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
அதன் பின் தேங்காய், சீனி இவற்றுடன் ஊற வைத்ததைக் கிரைண்டரில் போட்டு வெண்ணெய்போல் அரைத்து எடுக்கவும்.
உப்பு போட்டுக் கலக்கி தோசை மாவு பதத்தில் வைத்துக் கொள்ளவும். அதன் பின் 8லிருந்து 10 மணி நேரம் புளிக்கவிடவும்.
அப்பம் ஊற்றும்போது தோசைமாவு பதத்தைவிட சிறிது நீர்க்க கரைத்துக்கொள்ளவும்; அதற்கு தண்ணீரும் ஊற்றலாம்; இல்லையென்றால் இளநீர் ஊற்றியும் கரைத்துக் கொள்ளலாம்;
ஒரு கரண்டி மாவு எடுத்து நடுவில் ஊற்றவும். ஊற்றியதும் கடாயை இரண்டு கையால் பிடித்துச் சுழற்றவும்.
இரண்டு நிமிடம் மூடிப் போட்டு சிறு தீயில் வேகவைத்து எடுத்தால் சுவையான அப்பம் ரெடி!!!