பார்த்தாலே சாப்பிட தூண்டும் இலங்கையின் சூடான மீன் கறி: செய்வது எப்படி?
மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன.
மீனில் இருக்கும் ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்கள், மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியமான ஒன்று.
இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதுடன், எலும்புகள் வலுவாக உதவுகிறது.
இதை வைத்து சுவையான மீன் கறி செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
500 கிராம் மீன்
வெங்காயம் -2 (தாளிக்க நறுக்கவும்)
தக்காளி- 2 அல்லது 3
பச்சைமிளகாய்- 3
புளி- தேவையான அளவு
மிளகாய் தூள்- 1 முதல் 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி
கறி தூள்- 1 தேக்கரண்டி
தேங்காய் பால்- 1 கப்
பட்டை, கிராம்பு, ஏலக்காய்- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, புளி கூழ் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும்.
அதனுடன், வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அடுத்ததாக தக்காளி, புளிகரைசல் ஊற்றி கொதிக்க விடவும், ஒரு கொதி நிலைக்கு வந்தவும், மீன்களை சேர்க்கவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து இறக்கினால் சூடான மீன் கறி தயார்!!!