வெள்ளரிக்காயை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் ? எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் ? கட்டாயம் தெரிஞ்சிகோங்க
வெயில் காலத்திற்கு ஏற்ற காய்கறிகளில் வெள்ளரிக்காய் மிகச்சிறந்த பயன்களை அளிக்கக்கூடியது.
வெள்ளரிக்காயில் அதிக அளவு நீர்ச்சத்தும் நார்ச்சத்து வைடமன் ஏ , வைடமன் பி, வைடமன் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் என உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.
இது கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் வெள்ளரிக்காய் பல நோய்களை தீர்க்க கூடியது.
இருப்பினும் இது சில சமயங்களில் அதிகளவு எடுத்து கொண்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எப்போது சாப்பிட வேண்டும், எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிந்துகொண்டால், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் வராமல் தடுக்கலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
எப்போது எடுத்து கொள்ளலாம்?
இரவு நேரங்களில் நீங்கள் வெள்ளரிக்காயை சாப்பிட்டால், அது உங்களின் தூக்கத்தையும், ஜீரணிக்கும் சக்தியையும் பாதிக்கும்.
அதனால், எப்போதும், உறங்க செல்வதற்கு 2 அல்லது 3 மணி நேரங்களுக்கு முன்பாக வெள்ளரிக்காயை சாப்பிடுவது நல்லது. தூங்க செல்வதற்கு முன்பு மற்ற உணவுகளுடன் சேர்த்து வெள்ளரிக்காயை சாப்பிட்டால், ஜீரணிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்.
பக்கவிளைவு
- வெள்ளரி விதையில் குக்குர்பிட்டின் (cucurbitin) என்ற மூலப்பொருள் உள்ளது. இதில் டையூரிடிக் பண்பு இருப்பதால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது உடல் சமநிலையை பாதிப்பு நீரிழப்புக்கு வழிவகுக்கும்.
- வெள்ளரி சாப்பிட்டபிறகு உங்கள் வயிற்றில் ஏதாவது அசௌகரியத்தை உணர்ந்தால், நீங்கள் தேவைக்கு அதிகமான வெள்ளரிக்காயை எடுத்து இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.
- நாள்பட்ட சைனஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி வெள்ளரிக்காயை சாப்பிடுவது நல்லது. இல்லையென்றால் உங்களின் சைனஸ் தொல்லை மேலும் அதிகமாகி, வேண்டாத தொந்தரவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
- வெள்ளரிக்காயில் இருக்கும் குக்குர்பிட்டின் என்சைம் சிலருக்கு தோல் சார்ந்த ஒவ்வாமைகளை ஏற்படுத்தலாம்.