கால்பந்து அரங்கத்தில் ஆயிரக்கணக்கான பொம்மைகளை வீசிய ரசிகர்கள்: நெகிழ்ச்சி காரணம்
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் முன்னெடுக்கப்பட்ட கால்பந்து போட்டியின் நடுவே, ரசிகர்கள் ஆயிரக்கணக்கான பொம்மைகளை வீசி நெகிழ வைத்துள்ளனர்.
துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் தப்பிய சிறார்களுக்காக இந்த முயற்சியை கால்பந்து ரசிகர்கள் முன்னெடுத்துள்ளனர். குறித்த நிகழ்வின் போது விளையாட்டு வீரர்கள் கைதட்டல்களுடன் ரசிகர்களை ஆதரித்துள்ளனர்.
’இந்த பொம்மை எனது நண்பருக்கு’ என்ற நிகழ்ச்சியின் அடிப்படையிலேயே ரசிகர்களால் பொம்மைகள் வீசப்பட்டுள்ளது. ஆட்டம் தொடங்கி 4 நிமிடங்கள் 17 நொடி என பதிவானதும், விளையாட்டு நிறுத்தப்பட்டது.
பிப்ரவரி 6ம் திகதி விடிகாலை 4.17 மணிக்கு தான் துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம் பதிவானது. இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 50,000 கடந்துள்ளது.
பல மில்லியன் மக்கள் வீடிழந்துள்ளனர். தொடர்ந்தும் அப்பகுதியில் நிலநடுக்கம் பதிவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.