விமானியறையில் அடிதடி; அதிரடியாக நீக்கிய நிறுவனம்
Air France விமானியறையில் விமானிகள் இருவர் அடிதடியில் ஈடுபட்டதை அடுத்து, அவர்கள் இருவரும் தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் Air France விமானத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்ததாக La Tribune செய்தி நிறுவனம் கூறியது.

ஜெனீவா நகரிலிருந்து பாரிஸ் நகருக்குப் பறந்துகொண்டிருந்தபோது விமானிகள் இருவரும் அடித்துக்கொண்டு சண்டைபோட்டதாகக் கூறப்படுகின்றது.
இதனையடுத்து சண்டை சத்தத்தைக் கேட்டு விமானச் சிப்பந்திகள் சிலர் சண்டையில் தலையிட்டதுடன் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கும் வரை விமானச் சிப்பந்திகளில் ஒருவர் விமானியறையிலேயே இருந்ததாக La Tribune கூறியது.

அதேசமயம் அந்தச் சம்பவத்தால் விமானப் பயணம் பாதிக்கப்படவில்லை என Air France நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.