மதுபானத்தை பொதுவெளியில் கீழே ஊற்றி எதிர்ப்பை வெளியிட்ட கனடிய மாகாண முதல்வர்
கனடாவின் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் மதுபான உற்பத்தி நிறுவனமொன்றுக்கு நூதன முறையில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
குறித்த மதுபான உற்பத்தி நிறுவனத்தின் மதுபான போத்தல் ஒன்றில் இருந்த மதுபானத்தை பொதுமக்கள் முன்னிலையில் கீழே ஊற்றி உள்ளார்.
பிறவுன் றோயல் விஷ்கி என்ற நிறுவனத்தின் மதுபான போத்தலை அவர் இவ் இவ்வாறு ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கீழே ஊற்றி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த மதுபான உற்பத்தியை நிறுவனம் ஒன்றாரியோ மாகாணத்தில் காணப்பட்ட உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவிற்கு மாற்ற தீர்மானித்துள்ளது.
இந்த உற்பத்தி சாலை மூடப்படுவதனால் மாகாணத்தில் பெருமளவு தொழில் வாய்ப்புகள் இழக்கப்படும் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முதல்வர் அந்த நிறுவனத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் போத்தலின் இருந்த மதுபானத்தை கீழே ஊற்றி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
கனடாவில் மதுபானம் உற்பத்தி செய்யப்படும் நிறுவனங்களுக்கு ஆதரவினை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.