அமெரிக்கா வரிகளை நீக்கினால் கனடாவும் வரிகளை நீக்கத் தயார்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கனடா மீதான வரிகளை கைவிட்டால், கனடாவும் அமெரிக்கா மீதான வரிகளை நீக்க தயாராக இருக்கிறது என்று ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வரிகளுக்கு பதிலடியாக கனடா சுமார் 60 பில்லியன் டொலர் பெறுமதியான வரிகளை விதித்துள்ளது.
நாங்கள் நாளையே இந்த வரிகளை நீக்க தயாராக இருக்கிறோம், ஆனால் அவர் (ட்ரம்ப்) முதலில் தன்னுடைய வரிகளை அகற்ற வேண்டும் என ஃபோர்டு கூறினார்.
கடந்த மாதம், அமெரிக்கா உலகளாவிய அளவில் உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிக்கு 25% வரி விதித்தது.
இதேவேளை, கனடா, 155 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவிக்க தயாராக உள்ளது.
டிரம்பின் வரி விதிப்பினால் ஏற்படக்கூடிய தாக்கங்களை அமெரிக்கர்கள் இன்னமும் உணரவில்லை என போர்ட் தெரிவித்துள்ளார்.