ரஷ்யாவின் மிலேச்சத்தனமான தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த வெளிநாட்டவர்
ரஷிய போரை முன்னிட்டு உக்ரைனில் இருந்து மால்டோவா எல்லை நோக்கி சென்ற கார் மீது நடந்த தாக்குதலில் இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைனில் இருந்து மால்டோவா எல்லை நோக்கி இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ரோமன் பிராட்ஸ்கை தனது காரில் சென்றுள்ளார்.
அந்த கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் அவர் உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.
இதன்படி உக்ரைனில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வசித்து வருகின்றனர். அவர்களுடன் அமைச்சகம் தொடர்பில் உள்ளது.
பிராட்ஸ்கை மறைவு பற்றி அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது என தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், பிராட்ஸ்கை குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொண்டதுடன், இஸ்ரேலியர்கள் நாடு திரும்புவதற்கான ஒவ்வொரு சாத்தியப்பட்ட நடவடிக்கையையும் அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது என தெரிவித்து உள்ளார்.