வரலாறு காணாத வகையில் பிரிட்டனை விட்டு செல்லும் வெளிநாட்டினர்

United Kingdom India World
By Viro Dec 06, 2025 12:56 AM GMT
Viro

Viro

Report

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தங்கியிருந்த வெளிநாட்டினர், வரலாறு காணாத வகையில் வெளியேறி வருகின்றனர்.

அதில், இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். வேலைக்காகவும், படிப்புக்காகவும் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் நாடுகளில் பிரிட்டன் முன்னணியில் உள்ளது. அதுவே அந்நாட்டிற்கு பிரச்னையாகவும் மாறியது.

வரலாறு காணாத வகையில் பிரிட்டனை விட்டு செல்லும் வெளிநாட்டினர் | Foreigners Leaving Britain

வெளிநாட்டினர் எண்ணிக்கை

39 சதவீதம் வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரித்ததால், உள்ளூர் மக்கள் சிரமப்படுவதாக பிரிட்டன் அரசு கூறியது. இதனால், முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசு கடுமையான விசா விதிகளை அறிமுகப்படுத்தியது.

இதனால், பிரிட்டனின் நிகரக் குடியேற்றம் வெகுவாகக் குறைந்தது. பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை மற்றும் அங்கிருந்து கிளம்பும் வெளிநாட்டினரின் எண்ணிக்கைக்கு இடையே இருக்கும் வித்தியாசமே நிகர குடியேற்றம் எனப்படுகிறது. இது தான் இப்போது சரிந்து வருகிறது.

அந்நாட்டு தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் தகவலின்படி, 2023ல், 9.44 லட்சமாக இருந்த நிகர குடியேற்றம், 2025ல், 2.04 லட்சம் -ஆக குறைந்துள்ளது. இரு ஆண்டுகளில் ஏழு லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும், 2025 ஜூன் வரையிலான காலத்தில், பிரிட்டனை விட்டு வெளியேறியவர்களில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். மாணவர் விசாக்களில் இருந்த 45,000 பேர், பணி விசாக்களில் இருந்த 22,000 பேர் உட்பட, 75,000 பேர் வெளியேறியுள்ளனர்.

அடுத்தபடியாக, 42,000 சீனர்கள் வெளியேறியுள்ளனர். இதே போல், விசா வழங்குவதும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் வரை 32 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 31 லட்சமாக குறைந்துள்ளது.

குறிப்பாக, பணி விசாக்கள் 39 சதவீதம் வரை சரிந்துள்ளது. எச்சரிக்கை இதற்கு மத்தியிலும், 2025 ஜூன் வரையிலான காலத்தில், வேலை, படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக 1.5 லட்சம் பேர் பிரிட்டன் சென்றுள்ளனர்.

குடியேற்றத்தில் ஐரோப்பா அல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. வெளிநாட்டினரின் இருப்பு குறைந்தது பிரதமர் கெய்ர் ஸ்டாமர் அரசுக்கு பெரும் நிம்மதியாக அமைந்துள்ளது.

ஆனால், திறன்வாய்ந்த உழைப்பாளர்கள் வெளியேறுவது, பிரிட்டனின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US